2026 ஆம் ஆண்டிற்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் எனக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், 2027 ஆம் ஆண்டிற்கான புதிய கல்விப் பாடசாலைத் தவணை ஜனவரி மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, மூன்றாம் தவணை நிறைவடையும் வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்துக் கல்வி மற்றும் பரீட்சை நடவடிக்கைகளையும், உரிய கால அட்டவணைகளுக்கு அமைய எவ்விதத் தடங்கல்களுமின்றி நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
