HomeTop newsகிராம அபிவிருத்தி, மீன்பிடித் துறைக்கான நிதி செலவிடப்படவில்லை - நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

கிராம அபிவிருத்தி, மீன்பிடித் துறைக்கான நிதி செலவிடப்படவில்லை – நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

கிராம அபிவிருத்திக்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 35 பில்லியன் ரூபாயில் ஒரு பில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (27) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர், மீன்பிடித் துறைக்காக இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் ஒதுக்கப்பட்ட 9 பில்லியன் ரூபாயில் 1.9 பில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் மீன் உற்பத்தி 27 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினை மற்றும் வடக்கு மீனவர்களின் இந்திய இழுவைப் படகுப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

கிராமப்புறப் பொருளாதாரத்தையும் மீன்பிடித் துறையையும் மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகச் செலவிட அவசர வேலைத்திட்டம் தேவைப்படுவதாகவும், அடுத்த ஆண்டு மீன்பிடித் துறைக்காக குறைந்தபட்சம் 3 முதல் 4 பில்லியன் ரூபாயைச் செலவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular