நவம்பர் 30 ஆம் திகதி முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த போதிலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவிச் செயலாளர் டாக்டர் சாமில் விஜேசிங்க இன்று (நவம்பர் 27) தெரிவித்துள்ளார்.
நவம்பர் 30 ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதா என வாட்நியூஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இன்று (நவம்பர் 27) நடைபெற்ற அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில், நவம்பர் 30 ஆம் திகதிய நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
