புதிதாக நிறுவப்பட்ட சொத்து அகற்றல் ஒழுங்குமுறை அதிகாரசபையை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷான நனயக்காரவின் அதிகார வரம்பின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால், நவம்பர் 26 ஆம் திகதி எண் 2516/32 இன் கீழ் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2026 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மீட்பு, புனர்வாழ்வு மற்றும் சொத்து அகற்றல் (கூட்டு மற்றும் தனிநபர்) சட்டமும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் அதிகார வரம்பின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
