முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ, சுப்ரீம்சாட் (SupremeSAT) செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
