HomeTop newsஊழல் வழக்கில் யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னகோடா குற்றமற்றவர்கள் என வாதம்

ஊழல் வழக்கில் யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னகோடா குற்றமற்றவர்கள் என வாதம்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், யோஷித ராஜபக்ஷவும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகோடாவும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்து, குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று (23) நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2006ஆம் ஆண்டு, யோஷித ராஜபக்ஷவை தகுதியற்ற நிலையில் பிரித்தானியாவின் ராயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சிக்காக அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை டிசம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular