மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு கரையோரப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுவதுடன், அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்களின்போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
