மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் கே.பி. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தில், மறைந்த தேவா பாடிய ஆன்மிகப் பாடல் இடம்பெற்றுள்ளது. விக்னேஷ் சிவன், கார்த்திக் நேத்தா உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
தென்னிந்தியாவில் முதன்முறையாக ‘மெட்டா சினிமா’ பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் கே.பி. ஜெகன் தனது சொந்தப் பெயரிலேயே நடித்துள்ளார்.
மேலும், விஜய் வர்மா, சனாஷ்கா ஸ்ரீ, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் எம்.எஸ். பாஸ்கர் சிவனடியார் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு இயக்குநரின் வாழ்க்கையில் இடம்பெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், திருச்செந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழுமையாகப் படமாக்கப்பட்டுள்ளது.
