இந்து சமுத்திரத்தில் இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடியூட் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் பெண்டா கடற்பரப்பில், 20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும், இதனால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் கடலோரப் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
