சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாகப் போட்டியின்றி ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனான ஜெய் ஷா, கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில் ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இந்தோனேஷியாவின் பாலி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி இயக்குநர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் 2030ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அவர் ஐசிசி தலைவராகப் பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி விதிமுறைகளின்படி, தலைவர் ஒருவர் தலா மூன்று ஆண்டுகள் கொண்ட அதிகபட்சம் இரண்டு பதவிக்காலங்களுக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும்.
தனது மறுநியமனம் குறித்து கருத்து வெளியிட்ட ஜெய் ஷா, ஐசிசி தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்ததுடன், உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்குத் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவது, விளையாட்டை புதிய ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முக்கிய வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
