அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை முன்றலில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ரஜங்கனயே சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவில் நாளை (13) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலைத் தொடர்ந்து, ருவன்வெலிசாய விகாரை முன்றலில் இடம்பெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அங்கு நிலவும் சூழல் தொடர்பில் கவனம் திரும்பியுள்ளது.
