HomeTop news2027 வரவு - செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

2027 வரவு – செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனைகளுக்கு இன்று (12) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அரசாங்கத் தகவல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று பிற்பகல் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளதுடன், இதன்போது 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பாக வரவு – செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.

இதன் மூலம் 2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular