HomeTop newsபல்வேறு குற்றச்சாட்டுகளில் 208 பொலிஸ் அதிகாரிகள் கைது - 1,500 பேரின் சேவை இடைநிறுத்தம்

பல்வேறு குற்றச்சாட்டுகளில் 208 பொலிஸ் அதிகாரிகள் கைது – 1,500 பேரின் சேவை இடைநிறுத்தம்

போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இதுவரை 208 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு தவறுகள் காரணமாக சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 11,131 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 233 பேர் சிறுமிகள் எனவும் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளை அண்மித்த பகுதிகளில் ‘ஐஸ்’ உள்ளிட்ட போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular