கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான பட்டுவத்தே சாமர என்ற மனோஜ் சுரங்க லியனகே என்பவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (4) உத்தரவிடப்பட்டுள்ளது.
அசர்பைஜானில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் கடந்த மே 10ஆம் திகதி இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
அன்று முதல் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததுடன், இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
