HomeTop newsமுஸ்லிம்களின் ஜனாஸா விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக முஸ்லிம் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் குழுவினர் ஜம்இய்யா...

முஸ்லிம்களின் ஜனாஸா விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக முஸ்லிம் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் குழுவினர் ஜம்இய்யா தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் முஸ்லிம் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் குழுவினர், 2026 ஒக்டோபர் 28ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு விஜயம் செய்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.

மரணித்தவர்களின் (ஜனாஸா) உடல் உறுப்புகளைத் தானம் செய்வது தொடர்பான இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு, வைத்தியசாலைகளில் மரணித்தவர்களின் Post-mortem (பிரேத பரிசோதனை), வீடுகளில் ஏற்படும் மரணங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, மேற்படி விடயங்கள் குறித்த இஸ்லாமிய நிலைப்பாடுகள் மற்றும் சட்ட நடைமுறைகள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பில், ஜம்இய்யாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அரக்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் உட்பட உதவிப் பொதுச் செயலாளர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி, பொது முகாமையாளர் ஆகியோருடன் ஜம்இய்யாவின் ஆளணியினர் சிலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular