அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை (29) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337.13 ரூபாயாக அதிகரித்துள்ளது.
புதன்கிழமை(28) அன்று பதிவுசெய்யப்பட்ட 327.99 ரூபாயாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை, வியாழக்கிழமை (29) அன்று 328.02 ரூபாயாகச் சிறிதளவு உயர்ந்துள்ளது.
அதேவேளை, டொலரின் விற்பனை விலை 337.00 ரூபாயிலிருந்து 337.13 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, வளைகுடா நாணயங்கள் உட்பட மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறியளவிலான மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
