HomeTop newsவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்தது

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்தது

இந்த ஆண்டில் இதுவரை நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,813,484 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதனிடையே, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 119,805 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டின் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் 482,944 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து 169,405 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 120,980 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 102,920 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததும் இந்தியாவிலிருந்தேயாகும்.

குறித்த காலப்பகுதியில் 45,530 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular