Homeஉலகம்திபெத்தில் 7.0 ரிக்டர் நிலநடுக்கம் - 16 பேர் பலி

திபெத்தில் 7.0 ரிக்டர் நிலநடுக்கம் – 16 பேர் பலி

திபெத்தின் நாக்சு நகருக்கு அருகே நேற்று (22) ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் குறைந்தது 339 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், வீடுகளை இழந்த மக்களுக்காக தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவென சீன அரசு ஊடகமான சிசிடிவி தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular