Homeஉலகம்நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மழை எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மழை எச்சரிக்கை

நாட்டைச் சூழலுள்ள பகுதிகளில் காணப்படும் கீழ் மட்ட வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானமும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15) பிற்பகல் 3 மணிக்கு விடுத்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை, காலி மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular