HomeTop newsவருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்

வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்

வருமான வரிக்காகப் பதிவுசெய்த நபர்கள் 2025, 2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலக்கெடுவிற்கு முன்னர் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என அறிக்கையொன்றை வெளியிட்டு அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2025, 2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான தமது வருமான வரி அறிக்கைகளை இணையவழி (Online) முறையினூடாகவும் சமர்ப்பிக்க முடியும்.

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பில் மேலதிக தகவல்கள் அல்லது தெளிவுபடுத்தல்கள் தேவைப்படின் 1944 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தின் ஊடாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான WWW.IRD.GOV.LK ஊடாகவும் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular