HomeTop newsகிங் காலித் விமான நிலையம் மீது கொடூர தாக்குதல் - 12 பேர் பலி

கிங் காலித் விமான நிலையம் மீது கொடூர தாக்குதல் – 12 பேர் பலி

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது யேமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் மேலும் 309 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் நான்கு சவூதி நாட்டவர்கள், இரண்டு வங்கதேச நாட்டவர்கள் மற்றும் அமெரிக்கா, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து, கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் விமான நிலையம் மீது நடத்திய இரண்டு தாக்குதல்களில் விமானி ஒருவர் உட்பட மூன்று சவூதி நாட்டவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்த மறுநாளே இந்தப் புதிய தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த ஒக்டோபர் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் சவூதி அரேபியாவின் இரண்டு விமான நிலையங்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular