HomeTop newsஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்த உத்தரவு

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்த உத்தரவு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம் இன்று (5) உத்தரவிட்டுள்ளது.

கைதுசெய்யப்படுவதற்காகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று மேன்றையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியைச் சிறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular