HomeTop newsநாட்டின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 13 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையில் இன்று (21) பிற்பகல் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய காலி மாவட்டத்தின் நெலுவ, களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கோகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தெரணியகல, மாவனல்ல, யட்டியாந்தோட்டை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வௌியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular