HomeTop news‘டிட்வா’ சூறாவளி விசேட குழு அறிக்கைக்கு மேலும் அவகாசம்

‘டிட்வா’ சூறாவளி விசேட குழு அறிக்கைக்கு மேலும் அவகாசம்

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியை எதிர்கொள்வதில் காணப்பட்ட தயார்நிலை குறைபாடுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழுவின் காலக்கெடு டிசம்பர் 19ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க முன்வைத்த பிரேரணைக்கு அமைய இந்தக் கால நீடிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2026 ஜனவரி 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 102இன் கீழ், விசேட குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 19ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular