HomeTop news22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்குமா உயர்நீதிமன்றம்?

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்குமா உயர்நீதிமன்றம்?

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் இன்று (01) ஆரம்பித்துள்ளது.

இதுவரை 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மனுக்கள் இன்று காலை 10.00 மணிக்கு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளன.

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காக பிரதம நீதியரசரினால் நேற்று ஐவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு நியமிக்கப்பட்டது.

இந்த அமர்வில் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவுடன், நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular