Homeஉலகம்நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் - 469 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் – 469 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.

இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக நேபாள இராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

இமயமலைப் பகுதியில் பனிப்பாறை திடீரென உடைந்து விழுந்ததன் காரணமாகவே இந்த அதிதீவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக உருவான பெருவெள்ளமும் சேறும், எல்லைப் பகுதியில் உள்ள பல கிராமங்களையும் பாலங்களையும் முற்றிலுமாக அடித்துச் சென்றுள்ளன.

திபெத் எல்லைப் பகுதியிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ள நிலையில், சீனத் தரப்பில் 3 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் மூலம் நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 472 ஆக உயர்ந்திருக்கிறது.

திபெத்தின் சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புதிதாகத் தற்காலிகத் தடுப்பு ஏரி ஒன்று உருவாகியுள்ளது.இதில் சுமார் 30 இலட்சம் கன மீட்டர் நீர் தேங்கும் அபாயம் உள்ளதால், சீனா கீழ்நிலைப் பகுதிகளுக்கு ‘Level-IV’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போன நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் மற்றும் யாத்ரீகர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதற்காக நேபாள இராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular