நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான யோசனை குறித்து ஜனாதிபதியுடன் வெற்றிகரமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் குறித்த யோசனை தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலின்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதியிடம் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான தற்போதைய தீர்மானத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
