இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டிக்கான இலங்கை குழாம் இன்று (12) அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் முன்னணி விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், இம்முறை குழாமில் இடம்பெறவில்லை. இதனையடுத்து, தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணியில் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் திக்வெல்ல இலங்கை டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் அவர் இலங்கை டெஸ்ட் அணிக்காக விளையாடவில்லை.
மேலும், அறிமுக வீரர்களான துடுப்பாட்ட வீரர் பசிந்து சூரியபண்டார மற்றும் சகலதுறை வீரர் கேஷர நுவன்த ஆகியோரும் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை டெஸ்ட் குழாம்
- தனஞ்சய டி சில்வா – அணித்தலைவர்
- லஹிரு உதார
- நிஷான் மதுஷ்க
- கமிந்து மெண்டிஸ் – உப அணித்தலைவர்
- தினேஷ் சந்திமால்
- பசிந்து சூரியபண்டார
- சோனால் தினுஷ
- நிரோஷன் திக்வெல்ல – விக்கெட் காப்பாளர்
- ரமேஷ் மெண்டிஸ்
- பிரபாத் ஜயசூரிய
- கேஷர நுவன்த
- மிலான் ரத்நாயக்க
- அசித பெர்னாண்டோ
- லஹிரு குமார
- விஷ்வ பெர்னாண்டோ
- தில்ஷான் மதுஷங்க
