பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கு எதிரான வீதி விபத்து தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைகளை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வீதி விபத்து தொடர்பான வழக்கின் விசாரணைகளையே இவ்வாறு முன்கொண்டு செல்வதற்கு இடைக்கால தடை உத்தரவை இன்று (7) பிறப்பித்துள்ளது.
ரவி செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த போதே, கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
