Homeஉள்நாடுஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம்

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம்

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, அதற்குரிய சட்டமூலத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் நேற்று (27) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular