இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணியின் முன்னாள் தலைவரும் மூத்த வீரருமான மகேந்திர சிங் தோனி, புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தெரிவு செய்யும் செயல்முறையில் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய டி20 கிரிக்கெட்டில் வேகமாக மாறி வரும் ஆட்ட உத்திகள், புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகள் மற்றும் அணியின் நீண்டகால எதிர்காலத் திட்டங்களை கருத்தில் கொண்டு, அதற்கேற்ற பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பில் CSK நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும், அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
