நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 80,905 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 24ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி, இந்த மாதத்தில் மட்டும் 25,530 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 17,135 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, கொழும்பு மாவட்டத்தில் 16,140 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,574 பேரும் டெங்கு நோயாளிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
