2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனிக்கு எதிராக பராகுவே அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை முன்னிட்டு, அந்நாட்டு ஜனாதிபதி சாண்டியாகோ பெனா செவ்வாய்க்கிழமையை தேசிய விடுமுறை நாளாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான உத்தியோகபூர்வ ஆணையில் கையெழுத்திடும் புகைப்படத்தை தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஜனாதிபதி, தேசிய விடுமுறை அறிவிப்பை வெளியிட்டார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான ஆட்டத்தில், பரபரப்பாக நடைபெற்ற மோதலின் முடிவில், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை பராகுவே வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பராகுவே முழுவதும் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மக்களின் பெரும் வரவேற்பு மற்றும் கோரிக்கையைத் தொடர்ந்து தேசிய விடுமுறை அறிவிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
