தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவராக அவர் இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட 3 அதிகாரிகளை, அந்த நிறுவனத்தில் பணியமர்த்துவதற்குப் பதிலாக, அப்போதைய அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அலுவலகத்தில் பணிபுரிய அமர்த்தியதன் மூலம் நிகழ்ந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
