HomeTop newsஈரானின் மறைந்த உச்சத் தலைவர் இறுதிச்சடங்கில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு

ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் இறுதிச்சடங்கில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு

ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க, இந்தியப் பிரதமர் மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார் இஸ்லாமிய குடியரசின் அதிபர் மசூத் பெசெஷ்கியான்.

அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து மார்ச் மாதம் இறுதிச் சடங்குகள் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், மத்திய கிழக்கில் தொடர்ந்த போரால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு மரியாதையுடன் ஜூலை 4 முதல் 9ம் திகதி வரை இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. முதல்நாள் தெஹ்ரானின் கிராண்ட் மொசல்லா வளாகத்தில் கமேனியின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து தலைநகர் தெஹ்ரான் மற்றும், கோமில் பொது ஊர்வலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஈராக் நகரங்கள் நஜாஃப் மற்றும் கர்பலாவிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 9ம் தேதி கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் இருக்கும் இமாம் ரெஸா தர்காவில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular