Homeவிளையாட்டுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் - இந்தியா அபார வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி கடந்த 6ம் தேதி நியூசண்டிகரில் தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்படி இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 126 ரன்களும், ரிஷப் பண்ட் 100 ரன்களும் குவித்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் முகமது சலீம் சபி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் மனவ் சுதர் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 412 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி பாலோ ஆன் ஆனது. இதனால், 2வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 13ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular