Homeவிளையாட்டுவிராட் கோஹ்லியை புகழ்ந்த ஆஸ்திரேலிய துணை பிரதமர்

விராட் கோஹ்லியை புகழ்ந்த ஆஸ்திரேலிய துணை பிரதமர்

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, 2-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

பெங்களூரு அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த விராட் கோலி, 75 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரது சிறப்பான ஆட்டத்திற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ரிச்சர்ட் மார்ல்ஸ் விராட் கோலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

மேலும், பெங்களூரு அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்களானஜோஷ் ஹேசல்வுட் மற்றும் டிம் டேவிட் ஆகியோரின் பங்களிப்பு, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான வலுவான நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக ரிச்சர்ட் மார்ல்ஸ் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய துணை பிரதமரின் இந்த பாராட்டு, விராட் கோலி மற்றும் பெங்களூரு அணியின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular