Homeஉள்நாடு160 மெகாவாட் மின்கல சேமிப்பு திட்டம் தொடர்பிலான விசேட அறிவிப்பு

160 மெகாவாட் மின்கல சேமிப்பு திட்டம் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 160 மெகாவாட் கொள்ளளவு கொண்ட 16 மின்கல சேமிப்பு அமைப்புகளுக்காக ஒரு சர்வதேச போட்டி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

அதன்படி, இந்தத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, மேலும் இந்தத் திட்டம் தொடர்பாக விண்டி ஃபோர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 6 மின்கல அமைப்புகள் இன்று (30) கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

இந்த ஆறு ஆற்றல் சேமிப்பு அமைப்புகளும் வவுனியா, சுன்னாகம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் அமைந்துள்ள மின்சாரப் பரிமாற்றத் துணை மின் நிலையங்களுக்கு அருகில் நிறுவப்பட உள்ளன.

மேலும், ஒவ்வொரு அமைப்பும் பகல் நேரத்தில் 40 மெகாவாட் மின்சாரத்தைச் சேமிக்கும் திறன் கொண்டது. அத்துடன், மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கும் இரவு நேரங்களில் 10 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆறு அமைப்புகளின் மொத்தத் திறன் 60 மெகாவாட் ஆகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular