HomeTop newsஅட்டமஸ்தான பணிகளுக்குத் தற்காலிக பொறுப்பு - ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் நியமனம்

அட்டமஸ்தான பணிகளுக்குத் தற்காலிக பொறுப்பு – ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் நியமனம்

அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிப்பதற்காக, வடமத்திய திசையின் பிரதம சங்கநாயக்கரும் ருவன்வெலி சைத்தியாராமாதிகாரியுமான வணக்கத்திற்குரிய ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக மல்வத்து மகா விகாரை இன்று (30) அறிவித்துள்ளது.

மல்வத்து மகா விகாரைப் பிரிவின் கண்டி வலயத்தின் பிரதம சங்கநாயக்கரும் தற்போதைய அட்டமஸ்தானாதிபதியுமான வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை இந்த தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்வத்து பிரிவின் செயலாளர் கலாநிதி வணக்கத்திற்குரிய பஹமுணே சுமங்கல நாயக்க தேரரின் கையொப்பத்துடன் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை:

மகா விகாரை வம்சத்தைச் சேர்ந்த ஷியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விகாரைப் பிரிவின் கண்டி வலயத்தின் பிரதம சங்கநாயக்க பதவி மற்றும் அட்டமஸ்தானாதிபதி பதவி தொடர்பானது

தற்போது இந்த இரு பதவிகளையும் வகிக்கும் பல்லேகம ஹேமரதன ஸ்தவிரரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து அவதானம் செலுத்திய மல்வத்து மகா விகாரையின் மகா சங்க சபை, சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து இது குறித்து விசாரணை நடத்தியது.

இதற்கமைய, 2026.05.30 அன்று கூடிய மல்வத்து மகா விகாரையின் கௌரவ மகா சங்க சபைக் கூட்டத்தில், பல்லேகம ஹேமரதன ஸ்தவிரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து இறுதித் தீர்ப்பு வரும் வரை, அவருக்கு வழங்கப்பட்டிருந்த  கண்டி வலய பிரதம சங்கநாயக்க பதவியை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மகா சங்க சபையின் உத்தரவின் பேரில், அட்டமஸ்தானக் குழுவின் உறுப்பினரும் வடமத்திய திசையின் பிரதம சங்கநாயக்கரும் ருவன்வெலி சேத்தியாராமாதிகாரியுமான ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க ஸ்தவிரரை, அதமஸ்தானாதிபதி பதவியின் பணிகளை தற்காலிகமாகக் கவனிப்பதற்காக நியமிக்க அதமஸ்தானக் குழு தீர்மானித்துள்ளதாக, மல்வத்து மகா விகாரைப் பிரிவின் அதிவணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரரின் கட்டளைக்கு இணங்க இத்தால் அறிவிக்கின்றேன்.”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular