HomeTop newsஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

ஷாணி அபேசேகர அவர்களை பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்மானம் இன்று (13) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பதவி உயர்வு 2026 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்திலிருந்து இதுவரை வழங்கப்படாத நிலுவை ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை முழுமையாகச் செலுத்துமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படும் ஷாணி அபேசேகர, நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய மற்றும் சிக்கலான குற்றப் புலனாய்வுகளை வழிநடத்திய திறமையான விசாரணை அதிகாரியாக அறியப்படுகிறார்.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைது செய்யப்பட்ட அவர், சுமார் 11 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு 3/2018 சுற்றுநிருப விதிகளின் அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்ட அவர், பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்த்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular