Homeசெய்திகுஜராத்திடம் வீழ்ந்தது ஆர்.சி.பி.!

குஜராத்திடம் வீழ்ந்தது ஆர்.சி.பி.!

ஐ.பி.எல்.தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 42 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று 30) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் அணி.

ஆரம்பம் முதலே பெங்களூரு வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. விராட் கோஹ்லி (28) அதிரடியாகத் தொடங்கினாலும், ககிசோ ரபாடா அவரை விரைவில் வெளியேற்றினார்.

தேவ்தத் படிக்கல் (40) ஓரளவிற்குப் போராடிய நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

156 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு கேப்டன் {ப்மன் கில் அதிரடியான அடித்தளம் அமைத்தார்.

15.5 ஓவர்களில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், பெங்களூரு அணி 2-வது இடத்திலேயே நீடிக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular