Homeசெய்திகலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் முற்பகல் 9 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் கூட்டம் ஆரம்பமாகும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

கலமுதுனை தமிழ் வித்தியாலயம் 1929 ஆம் ஆண்டு ஜுன் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும்.

நூற்றாண்டை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் இப்பாடசாலையில் பழைய மாணவர் சங்கமொன்று இல்லாமை பெரும் குறைப்பாடாக இருந்துவருகின்றது.

இந்நிலையிலேயே பழைய மாணவர் சங்கத்தை உருவாக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular