Homeசெய்திபொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

பொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக்கோரும் கை எழுத்து இயக்கம் இன்று பொகவந்தலாவ பகுதியில் ஆரம்பமானது.

நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி பொகவந்தலாவ நகரில் பொதுமக்கள் மனு கை எழுத்து சேகரிப்பில் ஈடுட்ட மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

” நோர்வூட் பிரதேச செயலகம் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியிலிருந்து தித்வா புயலனர்த்த நாளில் இரவோடு இரவாக ஹட்டன் நகருக்கு அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த அபகரிப்புக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் அதே நேரம் ஹட்டன் நகரில் புதிய பிரதேச செயலகம் ஒன்றை அமைக்கக் கோரியும் மலையக அரசியல் அரங்கம் இநத்க கோரிக்கை முன்வைத்துள்ளது.

அரங்கத்தின் ஐந்து அம்சக் கோரிக்கையின் நிறைவில் அரசாங்கத்தின் உயர்பீடத்துக்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்லவிரிப்பதகவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular