Homeஉலகம்அமெரிக்க கடற்படை செயலர் திடீர் விலகல்!

அமெரிக்க கடற்படை செயலர் திடீர் விலகல்!

அமெரிக்க கடற்படைச் செயலாளர் John Phelan தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தில் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும் சூழலில், இவரது வெளியேற்றம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

புதிய பொறுப்பாளர் நியமிக்கப்படும் வரை, கடற்படை துணைச் செயலாளர் ஹங் காவ் தற்காலிகமாக இப்பணியை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்தாலும், John Phelanவிலகுவதற்கான குறிப்பிட்ட காரணம் எதையும் பாதுகாப்புத் துறை வெளியிடவில்லை.

சமீபகாலமாக இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள முக்கிய அதிகாரிகள் நீக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.

இத்தகைய தலைமை மாற்றங்கள் அமெரிக்க பாதுகாப்புப் படையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular