Homeஉள்நாடுபதுளையில் சிறப்பாக நடைபெற்ற “சூரிய மங்கள விழா - 2026”

பதுளையில் சிறப்பாக நடைபெற்ற “சூரிய மங்கள விழா – 2026”

பதுளை வர்த்தக சங்கம், பதுளை மாநகர சபை மற்றும் பதுளை ஐக்கிய வர்த்தக சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த “பதுளை சூரிய மங்கள விழா – 2026” நேற்று (17) பதுளை கால்பந்து திடலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர தலைமையில், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சுற்றுலா துணை அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் தினிது சமன் ஹென்னாயக்க ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், பதுளை மாநகர முதல்வர் நந்தன ஹபுகொட, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல் பெர்னாண்டோ, பதுளை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது கலாச்சார நிகழ்ச்சிகள், வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் மக்களை மகிழ்விக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

— நடராஜா மலர்வேந்தன்-

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular