Homeஉள்நாடுபதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம்!

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம்!

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை மு.ப.9.00 மணிக்கு கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமான ஏ.கனகதேரன் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இப் பொதுக்கூட்டத்தில் 2026 /2028 ஆண்டிற்கான புதிய செயலாளர், பொருளாளர், நிர்வாக் குழு மற்றும் கணக்காய்வாளர் தெரிவு மற்றும் கடந்தகால நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கைகள் முன்வைப்பு என்பன இடம்பெறுவதுடன் எதிர்கால கல்வி மற்றும் கல்லூரியின் ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளன.

புதிய நிர்வாகிகள் தெரிவின் போது இம்மாதம் 8ஆம் திகதிக்குள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தில் தம்மை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்ட பழைய மாணவர்களுக்கு மட்டுமே புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular