Homeஉலகம்அமெரிக்காவுக்கு துணை நிற்கும் அரசு நாடுகளை தோல்வி அடைய விடமாட்டோம்!

அமெரிக்காவுக்கு துணை நிற்கும் அரசு நாடுகளை தோல்வி அடைய விடமாட்டோம்!

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் இலக்குகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், அமெரிக்கா வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட போர் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தினார்.

வெள்ளை மாளிகையில் இருந்து 19 நிமிடம் அவர் ஆற்றிய தொலைக்காட்சி உரையில், ‘‘ஈரானுக்கு எதிரான போர் முடிவடையும் தருவாயில் உள்ளது. நாங்கள் இதை முடிக்கப் போகிறோம். மிக வேகமாக முடிக்கப் போகிறோம். நாங்கள் இலக்கை நெருங்கிவிட்டோம்.

ஈரான் ராணுவத்தை நசுக்க வேண்டும், ஈரானிய மதகுருமார்களின் அரசு பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு அளிக்கும் ஆதரவை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், ஈரான் அணுஆயுதம் பெறுவதை தடுக்க வேண்டும் ஆகிய நோக்கங்களுக்காகவே இந்த போரில் அமெரிக்கா இணைந்தது.

இந்த முக்கிய நோக்கங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த நான்கு வாரங்களில் நமது ஆயுதப் படைகள் போர்க்களத்தில் விரைவான, தீர்க்கமான, மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளன. இதுபோன்ற வெற்றிகளை இதற்கு முன் மிகச் சிலரே கண்டிருக்கிறார்கள்.

ஈரானில் உள்ள அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுவிட்டனர். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் அவர்கள் இருக்க வேண்டிய கற்காலத்துக்கே அவர்களை திரும்ப அழைத்துச் செல்லப் போகிறோம்.

அமெரிக்க பேச்சுவார்த்தையில் ஈரான் தீர்வை எட்டாவிட்டால், அவர்களின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும் நாங்கள் தாக்குவோம். எல்லா வாய்ப்புகளும் எங்களிடம் உள்ளன. அவர்களிடம் (ஈரானிடம்) எதுவும் இல்லை. அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் அரபு நாடுகள் காயப்படவோ அல்லது தோல்வியடையவோ நான் அனுமதிக்க மாட்டேன்’’ என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular