Homeஉள்நாடுஅமெரிக்காவின் கோரிக்கைகள் நியாயமற்றவை! ஈரான் விளக்கம்!!

அமெரிக்காவின் கோரிக்கைகள் நியாயமற்றவை! ஈரான் விளக்கம்!!

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என ஈரான் வெளிவிவகார அமைச்சு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இடைத்தரகர்கள் வழியாக அமெரிக்கா விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமற்றவை மற்றும் வரம்பு மீறியவை என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் Esmaeil Baghaei தெரிவித்தார்.

தனது நிலைப்பாட்டில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும், எனினும், அமெரிக்கா தனது கருத்துக்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்டை நாடுகளின் அமைதி முயற்சிகளை ஈரான் மதித்தாலும், பிராந்தியப் போரைத் தொடங்கியவர்கள் யார் என்பதை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular