Homeஉள்நாடுதோட்டப்புற வைத்தியசாலைகள் புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்!

தோட்டப்புற வைத்தியசாலைகள் புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்!

தோட்டப்புற வைத்தியசாலைகள் புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்!

ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பும் வகையில் மலையகத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் வைத்தியசாலைகளை புனரமைக்கும் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை புனரமைப்பதற்காக அரசாங்கத்தினால்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஹப்பகஸ்தென்ன தோட்ட வைத்தியசாலையும் புனரமைப்பதற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 45 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வைத்தியசாலையின். புனரமைப்பு பணிகளை நேற்றைய தினம்
(27/ 03 /2026) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தயலிங்கம் பிரதீப் மேற்பார்வை செய்திருந்த சந்தர்ப்பத்திலே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அத்தோடு வைத்திய சாலைக்கு தேவையான வைத்தியர்கள், மற்றும் ஏனைய வசதிகளை வெகு விரைவாக பெற்றுக் கொடுப்படுதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.

இவ் விஜயத்தின் போது இரத்தினபுரி பிரதேச சபையின் எதிர் கட்சி தலைவர், பிரதேச சபை உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular