Homeஉலகம்ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: வெளிப்படையான விசாரணை வேண்டும் என்கிறது ஐ.நா.!

ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: வெளிப்படையான விசாரணை வேண்டும் என்கிறது ஐ.நா.!

தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பாடசாலைமீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் துர்க் விரிவான விசாரணையை வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பலியாகின.

அமெரிக்கப் படைகள் தவறுதலாக இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பில் அமெரிக்கா உள்ளக விசாரணைகளை நடத்திவருகின்றது.

குற்றவாளிகளைப் பொறுப்பாளி ஆக்குவதற்குத் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய வெளிப்படையான விசாரணை அவசியம் என்று ஐநா வலியுறுத்துகிறது.

நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பள்ளிக் குழந்தைகளைக் கொல்வதன் மூலம் அவற்றை ஒருபோதும் தீர்க்க முடியாது என்று வோல்கர் துர்க் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய இந்த விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய கோரிக்கையாக உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular